20 வயது இளம் நடிகை மர்ம மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

20 வயது இளம் நடிகை மர்ம மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

20 வயது இளம் நடிகை தனது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பிரபல பெங்காலி தொலைக்காட்சி நடிகை பல்லவி என்பவர் நேற்று தனது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்தார்

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

முதல் கட்ட விசாரணையில் நடிகை பல்லவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது

ஆனால் அவரது குடும்பத்தினர் மர்ம நபர்கள் செய்த கொலை என்றும் அவருக்கு ஒரு காதலன் இருந்ததாகவும் கூறி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது