பிரபல நடிகையின் தலைமுடியில் தீ: பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது விபரீதம்

பிரபல அமெரிக்க நடிகை நிக்கோல் ரிச்சி அவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அவரது தலை முடியில் தீ பற்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அமெரிக்க் நடிகை நிக்கோல் ரிச்சி தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடிய போது மெழுகுவர்த்தியை ஊதினார்.

அப்போது திடீரென அவரது தலை முடியில் தீப்பற்றியது. இதனால் அவரது கழுத்து போன்ற இடங்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.

இதனை அடுத்து பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக உதவி செய்து தீயை அணைத்தனர். இதனால் நடிகையின் மூடி பெருத்த சேதம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.