நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்!

தமிழ் திரையுலகில் கடந்த 80களில் பிரபல நடிகையாக இருந்த நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து திரையுலகினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

கே பாலச்சந்தர் இயக்கிய அவள் அப்படித்தான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சித்ரா அதன் பின் தமிழில் ஊர்க்காவலன், என் தங்கச்சி படிச்சவ, திருப்புமுனை, எதிர்காற்று, எங்கள் சுவாமி அய்யப்பன், நாடு அதை நாடு, சேரன் பாண்டியன், பொண்டாட்டி ராஜ்ஜியம், பாரம்பரியம் உட்பட பல திரைப்படங்களில் நடித்தார்

1990 ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆனது என்பதும் மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்த நல்லெண்ணெய் சித்ராவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்