டெல்லியில் நடிகை நக்மா திடீர் போராட்டம்: என்ன காரணம்?

டெல்லியில் நடிகை நக்மா தடுப்புகள் மீது ஏறி திடீரென போராட்டம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இதனை அடுத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் மகளிர் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது

மகளிர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நக்மா தலைமையில் இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தின்போது நடிகை நக்மா தடுப்புகள் மீது ஏறி போராட்டம் செய்தது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது