கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுகாஷ் என்பவரும் அவரது காதலி லீனா என்பவரும் சேர்ந்து ரூ.1000 கோடி அளவுக்கு மோசடி செய்துவிட்டு தற்போது தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அரசு திட்டப்பணிகளின் சலுகைகளை வாங்கித்தருவதாக தொழில் அதிபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றை ஏமாற்றி சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்ததாக சந்திரசேகர் சுகாஷ் என்பவரும் அவரது காதலியும் நடிகையுமான லீனா மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகார் தொடர்பாக் சுகாஷையும், நடிகை லீனாவையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கைதான இருவரும் ஜாமீன் பெற்று தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். ஆனால் தற்போது இரண்டு நாட்களாக அவர்கள் கையெழுத்திட வரவில்லை என்றும், அவர்கள் இருவரும் கொல்கத்தாவிற்கு தப்பி சென்றிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இருவரையும் பிடிக்கும் பணியில் சென்னை போலீஸார் திவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Leave a Reply