shadow

எனக்கும் கருணாநிதிக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். குஷ்பு பேட்டி

kushboo1பிரபல நடிகை குஷ்பு திமுக தலைவர் மு.கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராக இருந்தபோதும் திடீரென அவர் தி.மு.க.வை விட்டு வெளியேறியதற்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அவர் திமுகவில் இருந்து வெளியேறியதன் உண்மையான காரணத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. திமுகவும் இதுகுறித்து எவ்வித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, திமுகவில் இருந்து எதனால் வெளியேறினேன் என்ற காரணத்தை தாம் ஒருபோதும் சொல்ல முடியாது என்றும்  அந்த விஷயம் எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மட்டுமே தெரியும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு திமுகவில் சேர்ந்தபோது ஏற்கனவே அக்கட்சியில் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி ஆகிய கோஷ்டிகள் இருந்தன. இந்நிலையில் குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்ததில் இருந்தே கருணாநிதி அன்புக்குரியவராகவே பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின் முன்னிறுத்தப்பட்ட போது  நடிகை குஷ்பு, ஸ்டாலின் குறித்து பகிரங்கமாகவே சர்ச்சைக்குரிய ஒருசில கருத்துக்களை பதிவு செய்தார். இதனால் அவரது வீட்டின் மீது ஸ்டாலின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனால் மனமுடைந்த குஷ்பு திமுகவில் இருந்து வெளியேறினார். ஆனால் ஏன் திமுகவில் இருந்து வெளியேறினேன் என்பதை அவர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த குஷ்பு, “எல்லாருக்கும் சுதந்திரம் இருக்குது; அவங்க யோசனை பிரகாரம் யோசிக்கிறதுக்கும் என்ன நினைக்கிறாங்களோ அதை பேசறதுக்கும் சுதந்திரம் இருக்குது; அதை நான் எல்லாருக்கும் தெரியப்படுத்தனும்னு அவசியம் இல்லைன்னு எனக்கு தோணுது..என்று கூறிய குஷ்பு திமுகவில் இருந்து வெளியேறிய காரணம் எனக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் மட்டுமே தெரியும் என்றும் அதை வெளியே சொல்லப்போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

Leave a Reply