நீங்கள் மனிதர் அல்ல மகான்

 ராகவா லாரன்சுக்கு பிரபல நடிகை பாராட்டு

நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கொரோனா தடுப்பு நிதியாக ரூபாய் மூன்று கோடி நிதியுதவி செய்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், பெப்சி அமைப்பு 50 லட்சமும், நடன இயக்குனர் சங்கத்திற்கு 50 லட்சமும், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 25 லட்சமும், ராயபுரம் தொகுதி தினக்கூலி செய்து வாழும் மக்களுக்கு 75 லட்சமும் என மொத்தம் மூன்று கோடி நிவாரண நிதி அளிப்பதாக சமீபத்தில் நேற்று அவர் அறிவித்திருந்தார் என்பது பார்த்தோம்

இந்த நிலையில் ராகவாவின் கொடை வள்ளல் தன்மையை பலர் பாராட்டி வருகின்றனர் அந்த வகையில் நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவருமான கஸ்தூரி தனது டுவிட்டர் தளத்தில் ராகவா லாரன்ஸ் கொடைவள்ளல் குறித்து கூறியபோது, ‘நீங்கள் மனிதரல்ல மகான் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: நடிகர் ராகவா லாரன்ஸ் போன்ற தன்னிகரற்ற கொடை வள்ளலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இப்படி உதவுவது இவருக்கு புதுசும் இல்லை. நீங்க மனிதனில்லை மஹான். வாழ்க வாழ்க நீ எம்மான்

Leave a Reply