shadow

ஆர்.கே.நகரில் கவுதமியை களமிறக்குகிறாதா பாஜக?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்ற தொகுதியான ஆர்.கே.நகரில் வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சசிகலா அணியில் இருந்து தினகரனும், ஓபிஎஸ் அணியில் இருந்து திலகவதி ஐபிஎஸ் அவர்களும், தீபாவும் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திமுக வேட்பாளர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பாஜக நடிகை கவுதமியை ஆர்.கே.நகரில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் கவுதமியின் வீட்டுக்கு வருகை தந்த பாஜக பிரமுகர் ஒருவர் இதுகுறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் கவுதமி ஆர்.கே.நகர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று கூறப்படுகிறது

Leave a Reply