சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பாவனா, அதன் பின்னர் அசல், ஆர்யா, ஜெயம்கொண்டான், தீபாவளி, ராமேஸ்வரம் ஆகிய தமிழ் படங்களிலும், ஏராளமான மலையாள, தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் கன்னட படம் ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் பாவனாவுக்கு காதல் ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வருவதாகவும், தற்போது அவர்களுடைய திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதித்து விட்டதாகவும் தெரிகிறது.

வருகிற ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் பாவனா திருமணம் நடக்கவிருப்பதாக பாவனாவின் பெற்றோர் கூறியுள்ளனர். மேலும் திருமணத்திற்கு பின்னர் பாவனா சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களை மட்டும் பாவனா முடித்து கொடுத்துவிடுவார் என்றும் நவீன் செய்தியாளர்களிடம் கூறினார்.

Leave a Reply