தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் நேற்று முன் தினம் இரவு மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கினர். எல்லோரும் அவரவர் வீடுகளுக்கு செல்ல முற்படுகையில் பிரபல வீரர் விராட் கோஹ்லி மட்டும் நடிகை அனுஷ்கா சர்மா அனுப்பிய காரில் அவருடைய வீட்டிற்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு அதிகாலையில்தான் விராத் கோஹ்லி அவருடைய வீட்டுக்கு சென்றார் என கூறப்படுகிறது.

விராத் கோஹ்லியை விமானநிலையத்தில் இருந்து அழைத்து வர பி.எம்.டபிள்யூ காரை அனுஷ்கா சர்மா அனுப்பியிருந்தார் என்றும், பிரபல நிறுவன ஷாம்பு விளம்பரத்தில் இருவரும் சேர்ந்து நடித்ததில் இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது என்றும் பாலிவுட்டில் கூறப்படுகிறது.

Leave a Reply