நடிகர் விவேக் மாரடைப்பால் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல காமெடி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் மற்றும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது

இதனால் கோலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது டுவிட்டர் பக்கங்களில் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply