shadow

கீர்த்தி சுரேஷை டம்மி செய்ய இன்னொரு நாயகியை தேர்வு செய்த விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 62’ படத்தின் நாயகியாக கீர்த்திசுரேஷ் நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு மேலும் ஒரு ஜோடியாக பிரபல நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

வனமகன் படத்தில் அபாரமான நடனம் மூலம் அனைவரையும் கவர்ந்த சாயிஷா தான் அந்த இரண்டாவது நாயகி. இவர் இந்த படத்தில் எண்ட்ரி ஆகும்போது தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பதாக கூறி வந்துள்ளதால், இவருடைய கேரக்டர், கீர்த்தி கேரக்டரை விட அதிக முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது.

Leave a Reply