வல்லரசு இப்போது தேவையில்லை. விவசாயிகளை காக்கும் நல்லரசு தான் தேவை. விஜய்

வல்லரசு இப்போது தேவையில்லை. விவசாயிகளை காக்கும் நல்லரசு தான் தேவை. விஜய்

இளையதளபதி விஜய் நேற்று சினிமா இணையதளம் ஒன்றின் விருது வழங்கும்விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு தென்னிந்தியாவின் வசூல் மன்னன் என்ற விருதுவழங்கப்பட்டது.

இந்த விருதினை பெற்று கொண்ட விஜய் பின்னர் பேசியபோது, ‘நாம் நன்றாக இருக்கிறோம் ஆனால் நமக்கு சோறு போடும் விவசாயிகள் நன்றாக இல்லை

மேலும் 3 வேளை நமக்கு உணவு சுலபமாக கிடைப்பதால் அதன் மதிப்பு தெரியாமல் போய்விட்டது. விவசாயிகளின் நலன்களை கவனிக்காவிட்டால் அடுத்த சந்ததிக்கு உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்படும் .

அரிசியை உற்பத்தி செய்த விவசாயிகள் அதை இலவசமாக பெற ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறார்கள். விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பது அவசியம் மட்டுமல்ல, அவசரமும் கூட . முதலில் விவசாயிகளுக்கான நல்லரசு நாடாக இந்தியா மாற வேண்டும். வல்லரசாக மாறுவதை பிறகு பார்க்கலாம்

இவ்வாறு நடிகர் விஜய் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.