தமிழகத்தில் இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு விஜய் வந்தபோது அவரைச் சுற்றி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதை அடுத்து காவல்துறையினர் ரசிகர்களிடம் இருந்து அவரை மீட்டு வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து சென்று பாதுகாப்பாக வாக்களிக்க வைத்தனர்.

இதனை அடுத்து விஜய் தன்னுடைய வாக்கை பதிவு செய்த பின் மீண்டும் சைக்கிளில் தனது வீட்டிற்கு சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *