நடிகர் வடிவேலின் கதறி அழும் வீடியோ: பரபரப்பு தகவல்

நடிகர் வடிவேலின் கதறி அழும் வீடியோ: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக தமிழ் திரையுலக நடிகர் நடிகைகள் பலர் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் டுவிட்டரில் கணக்கு ஆரம்பித்த வைகைப்புயல் வடிவேல் அழுதுகொண்டே வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமும் நம்முடைய சந்ததிகளும் உயிருடன் வாழ வேண்டுமானால் இன்னும் சில நாட்களுக்கு அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று தான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதாக அந்த வீடியோவில் வடிவேலு கூறினார்

இவ்வாறு கூறிக் கொண்டே வரும்போது ஒரு கட்டத்தில் நா தழுதழுக்க கதறி அழுது உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டு கொள்கிறேன், யாரும் வெளியே போக வேண்டாம் என்று வடிவேலு கூறியது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சியை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/VadiveluOffl/status/1243201003320565761

Leave a Reply