shadow

பிரபல இளம் நடிகர் திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்

தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் சுதீர் வர்மா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் அவர் வீட்டில் விஷம் குடித்து மயக்கம் நிலையில் இருந்ததாகவும் உடனடியாக அவரை மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி நேற்று இரவு அவர் காலமானதாகவும் சுதிர் வர்மா உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் காதல் தோல்வியா என்ற ரீதியில் விசாரணை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.