shadow

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் காலமானார்!

தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் விசுவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சிவ நாராயணமூர்த்தி, அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார். குறிப்பாக விவேக் மற்றும் வடிவேலு படங்களில் உள்ள காமெடி காட்சிகளில் இவர் நடித்துள்ளார்

கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த சிவ நாராயணமூர்த்தி நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்

மறைந்த நடிகர் சிவ நாராயணமூர்த்திக்கு வயது 67 என்பது குறிப்பிடத்தக்கது.