நடிகர் ராகவா லாரன்ஸுக்கு டாக்டர் பட்டம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவின் பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ்,

இத்தனை அடையாளங்கள் இருந்தாலும், தன்னை சிறந்த மனிதாபிமானம் உள்ளவராக அடையாளப்படுத்திக் கொள்ளவே விரும்புபவர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அவர் தொடர்ந்து செய்து வரும் உதவிகளையும், சமூக சேவைகளையும் கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.