shadow

அதிமுகவில் இருந்து திமுகவிற்கு தாவிய நடிகர் ராதாரவி

பிரபல வில்லன் நடிகரும் முன்னாள் நடிகர் சங்க செயலாளருமான ராதாரவி இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் 2001 முதல் 2006ஆம் ஆண்டு வரை சைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்த ராதாரவி, பின்னர் அதிமுகவில் இருந்து சிலகாலம் விலகியிருந்தார். பின்னர் மீண்டும் 2010ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இருப்பினும் அவருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை

இந்நிலையில் அதிமுக தற்போது இரண்டாக் பிளவுபட்டதை அடுத்து ராதாரவி திமுகவில் இணைந்து கொண்டார். இன்று மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த ராதாரவி திமுகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டார்.

தற்போதைய சூழலில் தமிழ்நாட்டை மு.க.ஸ்டாலினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் ஸ்டாலின் பிறந்த நாளில் பல புதிய முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் ராதாரவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

Leave a Reply