பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91
பிரபல பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஸ்வரராவ் கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இன்று அதிகாலை அவருடைய உடல்நிலை மிகவும் பாதிப்படைந்து சிகிச்சை பலனின்று அவர் மரணம் அடைந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நடிகர் நாகேஸ்வரராவ், கடந்த 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி பிறந்தார். தர்மபத்தினி என்ற படத்தின் மூலம் 1940ஆம் ஆண்டு நடிகராக அறிமுகம் ஆன நாகேஸ்வரராவ், இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னட, போன்ற மொழிகளில் சேர்த்து 256 படங்கள் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஸ்ரீராகஜெயம். தற்போது மனம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் நாகார்ஜுனன் இவருடைய மகன் ஆவார். நடிகர் நாகசைதன்யா இவருடைய பேரன் ஆவார்.
மரணம் அடைந்த நாகேஸ்வரராவ்க்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடைய இறுதிச்சடங்கு நாளை ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.

Leave a Reply