shadow

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் திரையுலகையின் முன்னணி குண சித்திர நடிகர்களில் ஒருவரான ராமதாஸ் என்பவர் காலமானார். இதனை அடுத்து அவரது மகன் தனது பேஸ்புக் பக்கத்தில் தனது தந்தை காலமாகி விட்டதாக அறிவித்துள்ளார்.

விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் போலீஸ் கேரக்டர்களில் நடித்த ராமதாஸ் கடந்த 40 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ராமதாஸ் ’காக்கி சட்டை’ ’விசாரணை’ ’விக்ரம் வேதா’ ’மாரி 2 ’ ’அறம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.