பிரபல நடிகர் சாலை விபத்தில் மரணம்: கொலையா? உண்மையான விபத்தா?

பிரபல பஞ்சாபி நடிகர் திலீப் சிங் சித்து நேற்று இரவு டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்

அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இது உண்மையான விபத்தா? அல்லது சதியா என டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டெல்லியில் மத்திய அரசின் புதிய வேளாண் கொள்கையை எதிர்த்து விவசாயிகள் நடத்திய பேரணியில் நடிகர் திலீப் சிங் சித்து கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார் என்பதும் இதனை அடுத்து அவர் சமீபத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.