shadow

பிரபல குணசித்திர நடிகரும் பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

தங்கைக்கோர் கீதம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான ஆனந்த்பாபு அதன்பின்னர் உதயகீதம், இளமை, விஸ்வநாதன் வேலை வேணும், பாடும் வானம்பாடி, புரியாத புதிர் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

சூர்யா நடித்த ஆதவன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது அதேபோல் தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் இன்று அவருக்கு ரசிகர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்