மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்தவர் மீது ஆசிட் வீசிய போலீஸ் அதிகாரி!

திருவண்ணாமலையில் ஸ்ரீபால் என்ற போலீஸ் அதிகாரி தன் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த தமிழக அரசு ஊழியர் ஒருவர் மீது ஆசிட் வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
திருவண்ணாமலையில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வரும் ஸ்ரீபால் என்பவரின் மனைவி ஞானசுந்தரி என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓவாக பணிபுரிந்துவரும் சிவக்குமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த போலீஸ் அதிகாரி ஸ்ரீபால், சிவகுமாரின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். இந்த சண்டை முற்றியதை அடுத்து மறைத்து வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து சிவக்குமார் மீது ஸ்ரீபால் வீசியுள்ளார்

இதனால் சிவகுமார் முகம் மார்பு கை கால் உள்பட உடம்பின் கிட்டத்தட்ட மொத்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டு படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீதருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

இதுகுறித்து சிவக்குமாரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஆண், பெண் இருவரின் கள்ளக்காதலால் தற்போது இரண்டு குடும்பங்களும் பெரும் சிக்கலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply