shadow

அச்சம் என்பது மடமையடா’ ரன்னிங் டைம்

aymசிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் சென்சார் தகவல்கள் சமீபத்தில் வெளிவந்த நிலையில் இந்த படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 135 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 15 நிமிடங்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. முதல் பாதி 70 நிமிடங்களும், 2வது பாதி 65 நிமிடங்களும் இந்த படம் ஓடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, மஞ்சிமா மோகன், டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கெளதம் மேனன் இந்த படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பில் சிம்புவின் கேரக்டரில் நாகசைதன்யா நடித்துள்ளார்.

Leave a Reply