சென்னை அண்ணாசாலையில் விபத்து: தண்ணீர் லாரி மோதி தம்பதி பரிதாப பலி

சென்னை அண்ணாசாலையில் விபத்து: தண்ணீர் லாரி மோதி தம்பதி பரிதாப பலி

சென்னை அண்ணாசாலையில் நடந்த விபத்து ஒன்றில் தண்ணீர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதி பரிதாபமாக பலியாகினர்.

சென்னை அண்ணாசாலையில் சற்று முன்னர் இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி இருவரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்பென்சர் பிளாசா அருகே அவர்கள் சென்ற போது ஒரு தண்ணீர் லாரி வேகமாக வந்து அவர்கள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பயங்கரமாக மோதியது.

இதில் கணவன், மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இருவருமே சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டதாகவும், இதுகுறித்து தண்ணீர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

Leave a Reply