சென்னை விமானநிலையத்தில் இருந்து கோயம்பேடு வரை சென்று கொண்டிருந்த ஏ.சி. பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை அந்த பேருந்து செயல்படும்.

சென்னை மெட்ரோ போக்குவரத்து கழகத்தின் அதிகாரி ஒருவர் நேற்று விடுத்த அறிக்கை ஒன்றில் ‘சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை சென்று கொண்டிருந்த நான்கு நீலநிற ஏ.சி. பேருந்துகளின் சேவை நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதிலாக அந்த பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் வரை இரண்டு பேருந்துகளும், கோயம்பேடில் இருந்து ரெஹ் ஹில்ஸ் வரை இரண்டு பேருந்துகளும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை இயங்கி வந்த பேருந்தில் ரூ.110 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த பேருந்துகள் பெரும்பாலும் காலியாகவே இயங்கிவந்தன. அதிக கட்டணம் காரணமாக பயணிகள் இந்த பேருந்துகளை பயன்படுத்தவில்லை. அதனால் இந்தசேவை நிறுத்தப்பட்டதாகவும், தற்போது இயங்கிவரும் கோயம்பேடு முதல் தாம்பரம் வரையிலான சேவைக்கு ரூ.45 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அதிகாரிகளால் கூறப்படுகிறது.

Leave a Reply