ரஜினியுடன் அப்துல்கலாம் உதவியாளர் சந்திப்பு.

ரஜினியுடன் அப்துல்கலாம் உதவியாளர் சந்திப்பு.

ponrajமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் உதவியாளர் பொன்ராஜ் திடீரென ரஜினியை சந்தித்து அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கிய அப்துல்கலாம் உதவியாளர் பொன்ராஜ் கடந்த சில நாட்களாக பல அரசியல் தலைவர்களை சந்தித்து வரும் நிலையில் நேற்று அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அரசியல் மற்றும் நதிநீர் இணைப்பு குறித்து பேசப்பட்டது. நதிநீர் இணைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட பொன்ராஜ் அதே விஷயத்தில் ஆர்வம் கொண்ட ரஜினியை சந்தித்தது தமிழக அரசியலில் பல ஊகங்களை எழுப்பியுள்ளது.

இந்த சந்திப்பின்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று பொன்ராஜ் விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கு கடவுள் விருப்பம் அதுவாக இருந்தால் நிச்சயம் நடக்கும் என்று ரஜினி பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது.

1996 தேர்தலில் இருந்து ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாய்ஸை அளித்து வந்த ரஜினி கடந்த சில வருடங்களாக அரசியலில் இருந்து முற்றிலும் விலகியுள்ளார். இந்நிலையில் அவர் அரசியலில் குதிப்பாரா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply