shadow

aaryaஆர்யா மற்றும் அனுஷ்கா ஏற்கனவே செல்வராகவன் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘சைஸ் ஜீரோ’

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ஆர்யா, உடற்பயிற்சி ஆசிரியராகவும், அனுஷ்கா அவரிடம் உடல் எடையை குறைக்க பயிற்சி எடுத்து வரும் மாணவியாகவும் நடித்துள்ளனர். உடல் எடையை குறைக்க அனுஷ்காவுக்கு டிப்ஸ் சொல்லித்தரும் ஆர்யாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுவதும், அதன் பின்னர் என்ன நடக்கின்றது என்பதை காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுடன் இயக்குனர் கே.எஸ்.பிரகாஷ் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

இரண்டாம் உலகம்’ திரைப்படத்தை தயாரித்த பிவிபி நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கின்றது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்து வருகின்றார். இந்த படம் இவ்வருட இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply