டெல்லி சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து விட்டது.
2-வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு கவர்னர் நஜீப் அழைப்பு விடுத்தார். ஆனால் அக்கட்சியினர் ஆட்சி அமைப்பது தொடர்பாக மக்களிடமே முடிவு கேட்க முடிவு செய்து குறுஞ்செய்தி மூலமாக ஆதரவை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ABP News-Nielsen என்னும் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் டெல்லியில் 80 % மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிதான் டெல்லியில் ஆட்சி அமைக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமா என கேட்கபட்டதற்கு 64% பேர் வேண்டாமென்றும், 33% பேர் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும், மறுதேர்தல் நடத்தினால் மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை ஆதரிப்பீர்களா என கேட்டதற்கு, 64% பேர் ஆம் என பதிலளித்துள்ளனர்.

இன்றைய சூழலில் டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply