நேற்று ஹரியானா முதல்வரை ஒரு இளைஞர் கன்னத்தில் அறைந்த பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் இன்று காலை டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ ஒருவரை ஒரு பெண் கன்னத்தில் அறைந்துள்ளார்.

டெல்லி விஹார் சங்கம் தொகுதியில் குடிநீர் தட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்த வந்த எம்.எல்.ஏ தினேஷ் மஹானியாவை அங்குள்ள ஒரு பெண் திடீரென அவரது கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ தினேஷ், இந்த பகுதியில் ஒரு கொள்ளை கும்பல் பொதுமக்களுக்கு தண்ணீரை விநியோகிக்க விடாமல் தடுத்து வருவதாகவும், அதுகுறித்து ஆய்வு செய்ய வந்த என்னை, நேரில் சந்திக்க தைரியமில்லாமல் ஒரு அப்பாவி பெண்ணை அனுப்பி அடிக்க வைத்துள்ளனர் என்றும், இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்ய தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply