டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை திடீரென ஒரு எம்.எல்.ஏ விலக்கிக்கொண்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுட்டுள்ளது.

கட்சி ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்து சாதனை புரிந்த டெல்லி முதலர் அரவிந்த் கெஜ்ரிவால், அந்த ஆட்சியை ஐந்து ஆண்டுகள் தக்கவைத்துக்கொள்வாரா என்பதில் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ வினோத்குமர் பின்னி சில காலமாக கட்சியின் தலைமையிடம் கருத்துவேறுபாடு கொண்டிருந்தார். இதனால் அதிருப்தியில் இருந்த அவர் நேற்று திடீரென அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டசபையில் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்கள்தான் கிடைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அந்த கட்சிக்கு மொத்தம் 37 உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு உள்ளது.  மெஜாரட்டிக்கு 36 இடங்கள் கண்டிப்பாக தேவை என்ற நிலையில் இன்னும் ஒரு எம்.எல்.ஏ தடம்புரண்டால் கூட ஆட்சியின் நிலையான தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply