shadow

jagathrakshakan

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் எஸ்.ஜெகத்ரட்சகன் கடந்த ஆட்சிக் காலத்தில் தனது Elite Distilleries Pvt Ltd என்ற நிறுவனத்தின் மூலம் ரூ.712 கோடி வருமானம் அடைந்ததாகவும், தற்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.466 கோடி லாபம் அடைந்ததாகவும் ஆத் ஆத்மி கட்சியின்  அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. இக்கட்சி டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுவிற்பனை செய்வதன் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வருமானம் அடைந்துள்ளன என்ற புள்ளிவிபரங்களை தகவல் அறியும் ஆணையத்தில் இருந்து கேட்டு பெற்று, தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் NJS Distilleries என்ற நிறுவனம் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் மதுசப்ளை செய்ய உரிமம் பெற்று கொள்ளை லாபம் அடைந்துள்ளதாகவும் ஆம் ஆத்மி அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. உரிமம் பெற்றதற்கு பிரதிபலனாகத்தான் கருணாநிதி கதை வசனம் எழுதிய உளியின் ஓசை, பெண் சிங்கம் போன்ற திரைப்படங்களை இந்த நிறுவனத்தின் ஜெயமுருகன் தயாரித்தார் என்று ஆம் ஆத்மி கூறுகிறாது.

மேலும் சசிகலாவின் மிடாஸ் நிறுவனம் தற்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.1077 கோடி வருமானம் அடைந்துள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது.

Leave a Reply