shadow

இந்திய அரசின் ஆதார் திட்டத்திற்கு உச்சி மாநாட்டில் விருது

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என வலியுறுத்தி வரும் இந்திய அரசு, அந்த ஆதார் அட்டையை மொபைல் எண், வங்கி எண், பான் எண் என அனைத்துடனும் இணைக்கவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் இந்திய அரசின் ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. அரசு துறையில் வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பத்துக்காக வழங்கப்பட்ட இந்த சிறப்பு விருதை அமீரக துணை பிரதமர், இந்திய அரசின் ஆதார் திட்ட உதவி பொது இயக்குநர் கதிர் நாராயணாவிடம் வழங்கினார்.

இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply