பின்லேடனுக்கு ஆதார் கார்டு விண்ணப்பித்த இளைஞர் கைது

பின்லேடனுக்கு ஆதார் கார்டு விண்ணப்பித்த இளைஞர் கைது

ஐ.எஸ். இயக்கத்தின் தலைவரான பின்லேடனை அமெரிக்கா சுட்டு கொன்றாலும் அவரது ஆதரவாளர்கள் இன்னும் உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர், இந்தியாவிலும் பின்லேடன் ஆதரவாளர்கள் இருப்பது குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது பின்லேடன் பெயரில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்த சதாம் ஹூசைன் மன்சூரி என்ற 25 வயது வாலிபர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக, அவர் குறித்த விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் சதாமை கைது செய்து சட்டத்துக்கு புறம்பான முறையில் செயல்பட்ட குற்றத்திற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், நீதிமன்ற அனுமதியோடு காவலில் எடுத்து சதாமை விசாரிக்க முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply