அரசு சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
அரசு சேவைகளையும் அரசு தரும் பயன்களையும் பெற ஆதார் அட்டை கட்டாயம் தேவையா? என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் சற்றுமுன் வழங்கப்பட்டது. இதன்படி அரசு சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடையாளம் கொடுத்தது ஆதார் அட்டை என்றும், ஆதாருக்காக குறைந்தபட்ச தகவல்களே பெறப்படுவதாகவும், தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கிறது என்பது மட்டுமே பிரச்னையாக உள்ளதாகவும் நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் அதிகமாக பேசப்படும் ஒன்றாக ஆதார் மாறி இருப்பதாகவும், ஒருவருக்கு கொடுக்கப்படும் ஆதார் அடையாள அட்டையை வேறு ஒருவருக்கு கொடுக்க முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தனது தீர்ப்பில் நீதிபதி சிக்ரி தெரிவித்துள்ளார்.
5 நீதிபதிகளில் 3 பேர் ஒரே மாதிரியாக தீர்ப்பு அளித்துள்ளதால் அரசு சேவையை பெற ஆதார் கட்டாயம் என்பது உறுதியாகியுள்ளது.
Leave a Reply