A1 திரைப்படத்தை புறக்கணியுங்கள்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் அறிக்கை

சந்தானம் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள A1 திரைப்படத்தில், பிராமணர்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சந்தானத்திற்கு தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள A1 என்கிற அக்யூஸ்ட் நம்பர் ஒன் திரைப்படத்தில் பிராமணர்களை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், அப்படத்தின் டீசரில் ஆம்லேட் குறித்த காட்சிகள் இடம்பெற்று சமூகவலைதளங்களில் மிகவும் சர்ச்சையானது.

இந்நிலையில், இதுபோன்ற காட்சிகளை தனது படத்தில் பயன்படுத்திய நடிகர் சந்தானத்திற்கு பிராமணர் சங்கம் சார்பாக கண்டனங்களை பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகர் சந்தானம், காமெடி காட்சிகளை உருவாக்குவதற்கு சுதந்திரம் வேண்டும் எனவும் யார் மனதையும் புண்படுத்துவதற்காக இதுபோன்ற காட்சிகள் அமைக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார்.

Leave a Reply