shadow

அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் சுவர்: பட்ஜெட் 33 பில்லியன் டாலர்

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லையில் அடுத்த 10 ஆண்டுகளில் சுவர் எழுப்ப திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக 18 பில்லியன் டாலருக்கு ஒப்புதல் வழங்குமாறு, அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மெக்சிகோ அகதிகள் எல்லை வழியாக ஊடுருவி, அமெரிக்காவில் குடியேறுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பயன் இல்லாததால் கடைசியாக இருநாடுகளுக்கும் இடையே சுவர் எழுப்ப டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போதே உறுதியளித்த அதிபர் டிரம்ப் தற்போது ஆயிரத்து 552 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கவும், அதில் சூரிய ஒளித் தகடுகள் பொருத்தி, மின்சாரம் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார்

அதற்கு மொத்தம் 33 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும், அதற்கான செயல்திட்ட வரைப்படத்தையும் அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப்பாதுகாப்புத் துறையினர் தயாரித்துள்ளனர். இதில் 18 பில்லியன் டாலர் சுவர் அமைக்கவும், 15 பில்லியன் டாலர் சூரிய ஒளி தகடு போன்ற தொழில்நுட்பங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கையெழுத்திட்டுள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.

Leave a Reply