shadow

பக்கோடா கடை வைக்க நிதி தாருங்கள்: மத்திய அமைச்சர் ஸ்மிரித் இரானிக்கு இளைஞர் வேண்டுகோள்

பிரதமர் மோடி சமீபத்தில் நம் இளைஞர்கள் நாள்தோறும் பக்கோடா விற்று, ரூ.200 சம்பாதிக்கிறார்கள். அதுவும் நல்ல வேலைவாய்ப்பு தான் என்று கூட்டம் ஒன்றில் பேசினார். இந்த பேச்சு எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கிடைத்த அல்வா போல் ஆனது. பிரதமரின் பேச்சை கலாய்த்து ராகுல்காந்தி உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமரை கிண்டல் செய்தனர்.

இந்த நிலையில் உபி மாநிலத்தை சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்பவர் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ‘தான் படித்து முடித்து வேலை தேடி வருவதாகவும், ஆனால் இனிமேல் வேலை தேடாமல் பிரதமரின் அறிவுரையின்படி பக்கோடா கடை வைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பக்கோடா கடை வைக்க வங்கியில் லோன் தர மறுப்பதாகவும், எனவே தனக்கு பிரதமரின் நிதியில் இருந்து பக்கோடா கடை வைக்க லோன் தர உதவி செய்யுங்கள் என்றும் அவர் இரானிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply