shadow

ரூபாய் நோட்டு ஒழிப்புக்கு ரிசர்வ் வங்கி கவர்னர்தான் பொறுப்பா? நேரில் ஆஜராக பாரளுமன்ற நிதிக்குழு உத்தரவு

ரூ.500, ரூ.1000 ஒழிப்பு நடவடிக்கையால் மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். பாராளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரிகங்களுக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல்தான் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க பாராளுமன்ற நிதிக்குழு முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாராளுமன்ற நிதிக்குழுவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிர் ஆத்த்யா, பேராசிரியர் சவுகத்ராய், சதீஷ் சந்திர மிஸ்ரா, திக்விஜய்சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

இந்த குழுவின் முன் வரும் 22ஆம் தேதி ரிசர்வ் வங்கி கவர்னர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவின் முன்னாள் பிரதமரும் முன்னாள் ரிசர்வ் வங்கியின் கவர்னருமான மன்மோகன்சிங் இருப்பதால் அவர் கேட்கும் கடுமையான கேள்விகளுக்கு உர்ஜித் சிங் பட்டேல் பதிலளிக்க முடியுமா? என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படும் என தெரிகிறது.

Leave a Reply