shadow

தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது

மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வின் புதிய அட்டவணையில் விபரங்கள் இதோ:

இன்று காலை 10 மணி முதல் பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம்

பிப்ரவரி 2ஆம் தேதி காலை 8 மணி முதல் பிப்ரவரி 5ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகளைத் தேர்வு செய்யலாம்.

பிப்ரவரி 7 முதல் 10 ஆம் தேதி வரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்

இடங்கள் ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ம் தேதிக்குள் வெளியிடப்படும்.

மருத்துவ ஒதுக்கீட்டிற்கான ஆணையை மாணவர்கள் 16ஆம் தேதி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்