மது அருந்தினால் கொரோனா தாக்காதா? உலக சுகாதார அமைப்பு விளக்கம்

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸ் தாக்குதலால் சுமார் 2,000 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்

இந்த நிலையில் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மது அருந்தினால் கொரோனா தாக்காது என்றும் உடலின் மீது மதுவை தெளித்து கொண்டால் கொரோனா வராது என்றும் செய்திகள் வெளியாகின்றன

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மது அருந்தினால் கொரோனா பரவாது என்பது வதந்தி என்றும் இவ்வாறு யாரும் செய்ய வேண்டாம் என்றும் இது அதிகப்படியான விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்றும் விளக்கம் அளித்துள்ளது இந்த வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply