shadow

சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம். ஆட்சி கலைக்கப்படுமா?

karnatakaதமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது என்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடக அரசு அவமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதைத் தொடர்ந்து நேற்று கர்நாடக சட்டசபையின் சிறப்பு கூட்டத்திற்கு முதல்வர் சித்தராமையா ஏற்பாடு செய்திருந்தார். இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்த தீர்மானத்தின் விபரம் பின்வருமாறு:

தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டை எதிர்ப்பது எங்கள் நோக்கம் அல்ல; ஆனால் இருப்பினும் போதிய மழை இல்லாத காரணத்தால் அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை. எனவே தமிழகத்திற்கு காவிரி நீர் வழங்க முடியாது. தவிர்க்க முடியாத காரணத்தால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது

இவ்வாறு அந்த தீர்மானம் தெரிவிக்கிறது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நிறைவேற்ற மறுத்துள்ளதை அடுத்து கர்நாடக அரசு மீது நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply