மீண்டும் நீலகிரியில் போட்டியிடுவேன்: ஆ.ராசா

மீண்டும் நீலகிரியில் போட்டியிடுவேன்: ஆ.ராசா

முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா, சமீபத்தில் 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானார். இதனையடுத்து அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைமை அனுமதித்தால் மீண்டும் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் கூட பெற முடியாமல் பரிதாபமாக திமுஅக் தற்போது இருக்கும் நிலையில் ஆ.ராசா போட்டியிட்டால் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்கள் இருப்பதால் அதற்குள் நீலகிரி மக்களிடம் சென்று தனது செல்வாக்கை ஆ.ராஜா உயர்த்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.