shadow

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சோதனை நடந்த நிலையில் இன்று அதிகாலை முதல் அவருடைய உதவியாளர் 2 பேர் வீடுகளில் சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர்கள் சரவணன் மற்றும் முருகன் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது

சென்னை ஆயிரம்விளக்கும் நந்தனம் உள்பட 4 இடங்களில் சோதனை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது

மேலும் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான சேலம் செல்வராஜ் என்ற மருத்துவரின் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாகவும் இந்த சோதனை இன்னும் சில மணிநேரங்களுக்கு நடக்கும் என்றும் கூறப்படுகிறது