shadow

பாலிவுட்டில் அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் மகன்

ஆஸ்கர் விருது பெற்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன் புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கு ஏற்ப அவரும் இசைத்துறையில் காலடி வைத்துள்ளார்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ‘மெளலானா’ என்ற பாடலையும், தெலுங்கில் நிர்மலா கான்வெண்ட்’ என்ற படத்தில் ஒரு பாடலையும், ‘கப்பிள்ஸ் ரிட்ரீட் என்ற ஆங்கில பாடலையும் பாடியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மகன் அமீன் தற்போது பாலிவுட் படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளதாக ரஹ்மான் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான ‘சச்சின் தி பில்லியன் டிரீம்ஸ்’ திரைப்படத்தின் ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் 14 வயது மகன் ஏ.ஆர்.அமீன் பாடியுள்ளதாகவும் இந்த பாடல் தற்போது இணையதளம் முழுவதும் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்

Leave a Reply