பாலிவுட்டில் தற்போது தயாராகி வரும் ஒரு ரொமாண்டிக் த்ரில்லர் படம் ஹைவே. ஒரு இளம்பெண் சாலைப்பயணம் செய்யும்போது ஹீரோவை பார்த்து காதலாகி நான்கே நாட்களில் அவனை திருமணம் செய்துகொள்கிறார். அதன் பிறகு இந்த ஜோடி ஆறு மாநிலங்கள் வழியாக சாலைப்பயணம் செய்கிறார்கள். அதில் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதை. படம் மும்பையில் தொடங்கி, தொடர்ந்து சாலையிலேயே எடுக்கப்பட்டுள்ளதால் படம் செம த்ரில்லிங்காக இருக்கும் என்கிறார் இயக்குனர் இம்தாஸ் அலி.

ஹைவே படத்தின் ஹைலைட்டே ஏ.ஆர்.ரஹ்மான் இசைதான் என்கிறார் இயக்குனர். இந்த படத்தை வெறும் த்ரில்லராக இயக்க நினைத்தேன். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைதான் இந்த படத்தை ரொமண்டிக் த்ரில்லராக என்னை மாற்ற வைத்தது என்று ரஹ்மானுக்கு புகழாரம் செய்கிறார். அதோடு என்னுடைய 15 வருட கனவு படத்திற்கு ரஹ்மான் உயிர் கொடுத்திருக்கிறார் என்கிறார் இயக்குனர்.

பிப்ரவரி 21ஆம் தேதி முதல் இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே ரஹ்மானின் இசை வெளியாகி உலகம் முழுவதும் பாடல்கள் ஹிட் ஆகி சாதனை படைத்து வருகிறது.

இந்த படத்தில் ரந்தீப் ஹூடா, மற்றும் ஆலியா பட் ஜோடி சேர்ந்துள்ளனர்.

[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1cmJ9ey” standard=”//www.youtube.com/v/o66nNnGZ5Rg?fs=1″ vars=”ytid=o66nNnGZ5Rg&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep1633″ /]

Leave a Reply