shadow

கோச்சடையான்’ பாகுபலியை விட வெற்றி பெற்றிருக்கும். ஆனா…ஏ.ஆர்.ரஹ்மான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம், பாகுபலி 2′ படத்தைவிட பெரிய வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மோசமாக இருந்ததால் அந்த படம் தோல்வி அடைந்ததாக ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியபோது, ‘ ‘பாகுபலி 2’ படத்திற்கு முன்பே ஒருசில இயக்குனர்கள் பிரமாண்டத்தை முயற்சி செய்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ரஜினிகாந்த் நடிப்பில் செளந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ திரைப்படம் ‘பாகுபலி 2′ அளவிற்கு வெற்றி பெற்றிருக்க வேண்டிய ஒரு படம். ஆனால் அந்த படத்தின் அனிமேஷன் மற்றும் சிஜி பணிகள் சரியாக செய்யாததால் உலக அரங்கில் அது வெற்றி பெறவில்லை. இதேபோல் பாலிவுட்டில் சேகர்கபூர் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இவர்களுடைய எண்ணம் சரியாக இருந்தாலும் அவர்களுடைய வழி சரியில்லாததால் தோல்வி கிடைத்தது. ஆனால் பாகுபலி படக்குழுவினர் அந்த தவறை செய்யாமல் சரியான வகையில் திறமையை வெளிப்படுத்தியதால் இந்த மாபெரும் வெற்றி கிடைத்தது’ என்று பாராட்டியுள்ளார்.

மேலும் ‘பாகுபலி 2’திரைப்படம் ரூ.2000 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைக்கும் என்றும், எஸ்.எஸ்.ராஜமெளலி படக்குழு தென்னிந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் ஒரு அடையாளம் தேடி தந்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply