shadow

முதலமைச்சரிடம் எதிர்பாராத பதவியை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் சிக்கிம் மாநில தூதராக அம்மாநில முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா நேற்று தொடங்கியது. முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவில் ஆஸ்கார் நாயகனும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பவன்குமார் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு விருப்பம் தெரிவித்தார். இதனை ரஹ்மானிடம் அவர் மேடையிலேயே அனுமதி கேட்டார். இந்த திடீர் எதிர்பாராத கோரிக்கையை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவர் முதல்வரின் கோரிக்கையை ஏற்றுகொண்டார். ரஹ்மான் தூதர் பதவியை ஏற்றுக்கொண்டதை அடுத்து மேடையிலேயே ரஹ்மானுக்கு நன்றி தெரிவிப்பதாக முதல்வர் பவன்குமார் கூறினார்.

பின்னர் இந்த விழாவில் பேசிய ரஹ்மான் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமித்தது எனக்கு கிடைத்த பாக்கியம், அதற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, இரக்கம், அமைதி, ஒருமைப்பாடு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காடாக திகழ்கிறது என்றார்.

விரைவில் சிக்கிம் பெருமைகள் குறித்து ஒரு பாடல் கம்போஸ் செய்யவுள்ளதாகவும், இந்த பாடலை சிக்கிம் சுற்றுலாத்துறை விளம்பரத்திற்காக பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply