shadow

மீண்டும் இணைகிறது ‘துப்பாக்கி’ வெற்றி கூட்டணி

murugadossஇளையதளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துப்பாக்கி’. இந்த வெற்றி கூட்டணியில் விஜய் தவிர மீது அனைவரும் மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் இணைகின்றனர்.

மெளனகுரு’ படத்தின் இந்தி ரீமேக் படத்தை ‘அகிரா’ என்ற பெயரில் இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக மகேஷ்பாபுவுடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரியவுள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், மகேஷ்பாபு தற்போது நடித்து வரும் ‘பிரம்மோத்சவம்’ படத்தை முடித்தவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

‘கத்தி’ படத்தால் ஏற்பட்ட மனக்கஷ்டம் காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் தமிழ்ப்படத்தை இயக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. மகேஷ்பாபு படத்தை முடித்தவுடன் மீண்டும் இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.

Leave a Reply